சிலிண்டருக்கு “பாடை கட்டி” காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. சிலிண்டர் விலை உயர்வின் எதிரொலி!

 

சிலிண்டருக்கு “பாடை கட்டி” காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. சிலிண்டர் விலை உயர்வின் எதிரொலி!

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியா முழுவதும் தினமும் 30 லட்சம் இண்டேன் (Indane)  சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியா முழுவதும் தினமும் 30 லட்சம் இண்டேன் (Indane)  சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. சிலிண்டரின் விலை சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகின்றன. அதே போலக் கடந்த 12 ஆம் தேதி மானியமில்லாத சிலிண்டர்களுக்கான விலை ரூ.147 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 ஆவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ரூ.287 உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் , கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில், சிலிண்டருக்கு பாடை கட்டி மாலை அணிவித்து சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.