சிலர் விலகுவதால் கட்சி கரைந்து விடுமா? – டிடிவி தினகரன் கேள்வி

 

சிலர் விலகுவதால் கட்சி கரைந்து விடுமா? – டிடிவி தினகரன் கேள்வி

சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் அமமுக பொது செயலாளர் சசிகலாவுடன் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று  சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுடன் சென்றிருந்தனர்.

edappadi

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை. என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியைத் தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது. இதில் இருந்தே நாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

சிலர் விலகிவிடுவதால் கட்சி காணாமல் போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

மேலும், அமமுகவில் இருந்து யாரும் விலகி சென்று அதிமுகவில் சேர மாட்டார்கள் என்றும், அப்படி அரசியல் செய்ய வேண்டிய நிலை அமமுகவினருக்கு இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.