சிற்பங்களின் புகழைச் சீன அதிபருக்கு எடுத்துரைத்த மோடி..!

 

சிற்பங்களின் புகழைச் சீன அதிபருக்கு எடுத்துரைத்த மோடி..!

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த வரலாற்று நிகழ்வு 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

வெகு நாட்களாக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் நிகழ்வான இந்தியப் பிரதமர்- சீன அதிபர் சந்திப்பு இன்று நடைபெற்று வருகிறது. சீன அதிபரைக் காணத் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சென்ற பிரதமரைத் தமிழக மக்கள் பெரிதும் வரவேற்றுப் போற்றினர். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த வரலாற்று நிகழ்வு 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

Modi

இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தவுடன் கை குலுக்கிக் கொண்டனர். அதனையடுத்து மோடி சீன அதிபருடன் நீண்ட  நேரம் உரையாடினார். உரையாடலை முடித்த பின்னர்,  மாமல்லபுரத்தில் உள்ள சீன-பல்லவ வரலாற்றை உணர்த்தும் அர்ஜுனன் தபசு, வெண்ணெய் பாறை உள்ளிட்ட சிற்பங்களின் பெருமையைச் சீன அதிபருக்கு விளக்கி சொன்னார்.