சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி அதிமுக அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

 

சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி அதிமுக அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பேருந்து மீது கல் வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

புதுதில்லி: பேருந்து மீது கல் வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாராயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு காரணமாக அதிமுக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இழக்க நேர்ந்தது. இதையடுத்து  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பாலகிருஷ்ண ரெட்டி, தண்டனையை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்த இடைக்கால மனுவை நீதிபதிகளை நிராகரித்தனர்.

இந்நிலையில், தண்டனையை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி பற்றிய அறிவிக்கையை சட்டப்பேரவை செயலகம் இதுவரை வெளியிடாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.