சிறைவாசம் முடித்து வெளியில் வருகிறார் சசிகலா…நன்னடத்தை விதிப்படி விடுதலை!?

 

சிறைவாசம் முடித்து வெளியில் வருகிறார் சசிகலா…நன்னடத்தை விதிப்படி விடுதலை!?

சொத்துக் குவிப்பு வழக்கில்  சிறையில் இருக்கும்  சசிகலா இரண்டு  ஆண்டுக்கால சிறை வாசத்தை முடித்துள்ளார்.

பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில்  சிறையில் இருக்கும்  சசிகலா இரண்டு  ஆண்டுக்கால சிறை வாசத்தை முடித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டிலிருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

sasikala

சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாகச் சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார். சிறையிலும் சசிகலா நடத்திய சொகுசு வாழ்க்கை  பலரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

sasi

இதைத் தொடர்ந்து சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சிறையிலிருந்து சசிகலா, நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோலில் வந்தார். அவரை முக்கிய பிரமுகர்கள் பலர் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து மீண்டும் சசிகலா சிறை வாழ்க்கைக்குச் சென்றார். 

sasikala

இந்நிலையில் கர்நாடக மாநில அரசு  நவம்பர் ஒன்றாம் தேதியன்று நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளை சிறை நன்னடத்தை விதிகளின் படி விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. ஏனென்றால் அன்று கர்நாடக மாநிலம் உருவான நாளாம். அதனால் அந்தப் பட்டியலில் சசிகலாவையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

sasi

ஆனால் சொகுசு வாழ்க்கைக்காக  அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறிய புகார் ஒன்று மட்டும் நிலுவையில் உள்ளது. அந்த புகாரின் மீதான விசாரணை முடியும் பட்சத்தில் நன்னடத்தை விதிகளின் படி நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு சசிகலா வெளியே வர வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

sasi

இதனிடையே சசிகலாவை பொதுச்செயலாளர்  பதவியிலிருந்து நீக்கி விட்டு அந்த பதவியை தற்போது தினகரன் கைப்பற்றியுள்ளார். மேலும் சசிகலாவின் ஒப்புதல் பேரில் தான்  இந்த நடவடிக்கை நடந்ததாகக் கூறி வரும் அவரது கருத்துக்கு  அமமுக- வினரே கடும் அதிருப்தியில் உள்ளனராம். ஒருவேளை நன்னடத்தை விதிகளின் படி சசிகலா வெளியில் வந்தாலும் அவரை தினகரன் கூஜாவாக வைத்திருப்பார். இனிமேல் சசிகலா ஆட்டம் செல்லாது என்று அதிமுகவினர் கருத்து கூறி வருகின்றனர்.