சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

 

சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடன் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடன் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரது வீட்டுக்குள் வருமான வரித்துறை நுழைந்திருக்க முடியுமா என பலர் கேள்வி எழுப்பினர்.  அதேபோல் சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் வீடுகளிலும், அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், கிருஷ்ண பிரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்த வருமான வரித்துறையினர் சிறைத்துறையிடம் அனுமதி பெற்றது.

இந்நிலையில், ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட  5 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.