சிறையிலிருந்து வெளியே வருகிறார்  “சின்னம்மா” சசிகலா!

 

சிறையிலிருந்து வெளியே வருகிறார்  “சின்னம்மா” சசிகலா!

நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவந்தது.  2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் சசிகலா உட்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குன்ஹா. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்குள் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்ததோடு, குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, 2017 பிப்ரவரி 15-ம் தேதி  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் நிச்சயம் வெளியே வருவார் என தெரிவித்திருந்தார்.