சிறையிலிருந்து தாய் மொழிக்காக போராடும் ப.சிதம்பரம்!

 

சிறையிலிருந்து தாய் மொழிக்காக போராடும் ப.சிதம்பரம்!

இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். 

pc

இந்நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிறையிலிருந்து தமிழுக்காக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,  “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும். எல்லா மொழியின் வளர்ச்சிக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால், இந்திய மக்களை ஒருங்கிணைப்பதே இந்தி மொழிதான் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.