சிறையிலடைக்கப்பட்ட முகிலன்: மக்களுக்காக போராடியது தவறா? மனைவி கதறல்!

 

சிறையிலடைக்கப்பட்ட முகிலன்: மக்களுக்காக  போராடியது தவறா? மனைவி கதறல்!

நெஞ்சுவலி என்று முகிலன் கூறியதால் அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது

மக்களுக்காக முகிலன் போராடியது தவறா? என்று  அவரது மனைவி பூங்கொடி கேள்வி எழுப்பியுள்ளார்

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சென்ற  காணாமல் போனார்.  இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் அவர் மீது  பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் வைத்துக் கடந்த 7 ஆம் தேதி  முகிலனை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்துப் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

mugilan

அப்போது தனக்கு நெஞ்சுவலி என்று முகிலன் கூறியதால் அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி அழைத்துச் செல்லப்பட்ட முகிலன் அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

mugilan

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முகிலன் மனைவி பூங்கொடி, காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தும்படிதான் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் முகிலனுக்கு ஓய்வு கொடுக்காமல் இரவோடு இரவாக கரூர் அழைத்து வந்து அவரை சிறையில் அடைத்துவிட்டனர்.   மக்களுக்காக முகிலன் போராடியது தவறா? எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.