சிறைச்சாலைக்குள் புகுந்தது கொரோனா வைரஸ்…. கைதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…. மத்திய பிரதேச கலெக்டர் தகவல்..

 

சிறைச்சாலைக்குள் புகுந்தது கொரோனா வைரஸ்…. கைதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…. மத்திய பிரதேச கலெக்டர் தகவல்..

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 4 கைதிகளில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜபல்பூர் சிறைக்கு கைதிகளை மாற்ற வேண்டாம் என இந்தூர் மற்றும் போபால் அதிகாரிகளிடம் அம்மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது சிறைச்சாலைக்கும் வந்து வி்ட்டது. மத்திய பிரதேசத்தில் இந்தூர் சிறையில் இருந்த 4 கைதிகள் ஜபல்பூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். ஜபல்பூர் மத்திய சிறையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜபல்பூர் மத்திய சிறை

அதில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற கைதிகள் 3 பேரும் சிறையின் உள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் பாரத் யாதவ் கூறுகையில், கைதிகள் 4 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

ஜபல்பூர் மாவட்ட கலெக்டர் பாரத் யாதவ்

தொற்று நோய் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற 3 பேரும் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தூர் மற்றும் போபால் அதிகாரிகளிடம் ஜபல்பூர் மத்திய  சிறைக்கு கைதிகளை மாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் இதுவரை (நேற்று காலை நிலவரப்படி) 443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.