சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை….. மத்திய அரசு அறிவிப்பு

 

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை….. மத்திய அரசு அறிவிப்பு

மார்ச் காலாண்டுக்கு பி.பி.எப். உள்பட அனைத்து சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது கடந்த டிசம்பர் காலாண்டின் வட்டி விகிதமே இந்த காலாண்டுக்கும்.

பி.பி.எப்., தேசிய சேமிப்பு பத்திரங்கள் உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அரச பத்திரங்களின் வாயிலான ஆதாயத்தை பொறுத்து சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் காலாண்டுக்கு சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

சேமிப்பு

பி.பி.எப். மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான  வட்டி விகிதம் தொடர்ந்து 7.9 சதவீதமாக எந்தவித மாற்றமும் இன்றி உள்ளது. சுகன்ய சம்ரிதி கணக்கு (8.4 சதவீதம்) மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம் (8.6 சதவீதம்) மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் (7.6 சதவீதம்) ஆகியவற்றுக்கு கடந்த காலாண்டின் வட்டி விகிதமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கிசான் விகாஸ் பத்திரம்

5 ஆண்டு கால தபால்நிலைய மாதந்திர வருவாய் திட்டத்துக்கு தொடர்ந்து 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். தபால் நிலைய 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்டுகளுக்கு 6.9 சதவீதமும், 5 ஆண்டு குறித்த கால டெபாசிட்டுகளுக்கு 7.7 சதவீதமும் வட்டி கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ் 5 ஆண்டு கால தொடர் டெபாசிட்டுகளுக்கு 7.2 சதவீதம் வட்டி கிடைக்கும்.