சிறுவர்கள் பட்டம் விட்டால் இவர்களுக்கு தான் தண்டனையாம்..! போலீஸ் எச்சரிக்கை!

 

சிறுவர்கள் பட்டம் விட்டால் இவர்களுக்கு தான் தண்டனையாம்..!  போலீஸ் எச்சரிக்கை!

வடசென்னை பகுதிகளில் இன்னும் இந்த மாஞ்சா நூல் காலச்சாரம் சட்டவிரோதமாக நடந்து வருகின்றது.

சென்னை : மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு காற்றாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது. இருப்பினும் வடசென்னை பகுதிகளில் இன்னும் இந்த மாஞ்சா நூல் காலச்சாரம் சட்டவிரோதமாக நடந்து வருகின்றது. 

manja

சமீபத்தில் சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அபிமன்யு என்ற 3 வயது குழந்தை மாஞ்சா கயிறு  கழுத்தை அறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. அதேபோல் நேற்று கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற இளைஞரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்துள்ளது. இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

manja

இந்நிலையில் காவல்துறை சார்பில் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூலால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி, மாஞ்சா நூலை விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்தால், விற்கும் வியாபாரி ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் மாஞ்சா நூல் பட்டம் விடாமல் பெற்றோர்கள் தான் கண்காணிக்க வேண்டும். அதையும் மீறி பட்டம் விட்டால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும்’ என்று எச்சரித்தார்.