சிறுவன் வாயிலிருந்து நீக்கப்பட்ட 526 பற்கள்: வியக்க வைக்கும் உண்மை!

 

சிறுவன் வாயிலிருந்து நீக்கப்பட்ட  526 பற்கள்: வியக்க வைக்கும் உண்மை!

ஏழு வயது சிறுவன் வாயிலிருந்து முறையற்று வளர்ந்திருந்த 526 பற்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் வாயிலிருந்து நீக்கப்பட்ட  526 பற்கள்: வியக்க வைக்கும் உண்மை!

சென்னை: ஏழு வயது சிறுவன் வாயிலிருந்து முறையற்று வளர்ந்திருந்த 526 பற்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன் 3 வயதிலிருந்தே,  காம்பவுண்ட் காம்போசைட் ஆன்டான்டோம் (compound composite ondontome) என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளான். மேலும் கீழ் பல்தாடை வீக்கத்தால் அவதிப்பட்டுவந்துள்ளான். அவனை மருத்துவ மனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால்  சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. 

இந்நிலையில், தற்போது ஏழுவயதாகும் அந்த சிறுவனைக் கீழ் தாடை வலி காரணமாகச் சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன்  எடுத்து பார்த்தபோது தான் சிறுவனின் கீழ் தாடையில் ஏராளமான பற்கள் வளர்ந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிறுவனின் வாயிலிருந்து சுமார் 526 பற்களை  பிடுங்கினர். இதையடுத்து தற்போது சிறுவன் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உலக அளவில் ஒருவரின் வாயில் இத்தனை பற்கள் இருந்தது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.