சிறுவன் கருணாநிதி கேட்ட கேள்வி.. திக்குமுக்காடிய சொற்பொழிவாளர்

 

சிறுவன் கருணாநிதி கேட்ட கேள்வி.. திக்குமுக்காடிய சொற்பொழிவாளர்

அன்று திருக்குவளையில் கதாகாலட்சேபம் நடந்துக் கொண்டிருந்தது. வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தவர் மக்களை அசைவ உணவிலிருந்து சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றும் விதமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய ஒவ்வொரு கருத்துக்கும் மந்தையில் வீற்றிருக்கும் ஆடுகளைப் போல எதிரே அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் தலையசைத்து, கைதட்டி ஆர்பரித்துக் கொண்டிருந்தது

அன்று திருக்குவளையில் கதாகாலட்சேபம் நடந்துக் கொண்டிருந்தது. வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தவர் மக்களை அசைவ உணவிலிருந்து சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றும் விதமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய ஒவ்வொரு கருத்துக்கும் மந்தையில் வீற்றிருக்கும் ஆடுகளைப் போல எதிரே அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் தலையசைத்து, கைதட்டி ஆர்பரித்துக் கொண்டிருந்தது. 

kalaignar karunanidhi

‘கடவுள், இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரையும் படைக்கும் போதே அந்த உயிருக்கான உணவையும் படைத்துவிட்டார். பசுவுக்கு புல்,பறவைக்குத் தானியம், குதிரைக்கு கொள்ளு என்று கடவுள் படைத்திருக்கிறார்..’ என்று பேசியப்படியே  கூட்டத்தைப் பார்த்து ‘இதோ, உன்னையும் என்னையும் படைச்சார்… கூடவே நாம் எல்லோரும் சாப்பிட இட்லி,தோசை உப்புமா,கேசரி, இத்யாதி,இத்யாதி என்று படைச்சார்’  என்று சொல்லி முடிக்கும் போது மக்கள் கூட்டம் மீண்டும் கரவொலி எழுப்பியது. ஆன்மிக பிரசங்கர் தன் பேச்சை மீண்டும் தொடர்ந்து, ‘ஆகவே,எந்த உயிரும் தன் உணவுக்காக இன்னொரு உயிரை கொல்லக்கூடாது’ என்றார். அப்பொழுது, கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் எழுந்து நின்று, கடவுள் போதனை செய்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து ‘ கடவுள் சிங்கத்துக்கு என்ன உணவை ஐயா படைச்சார்?’ என்று கேட்டான். கூட்டம் ஸ்தம்பித்தது.
அந்தச் சிறுவன் தான் கருணாநிதி. 
சிறுவயதிலேயே கடவுள் மறுப்பு கொள்கையும், தன்னம்பிக்கையும் தைரியமும் கருணாநிதிக்கு கைவந்திருந்தது. தன் மீது திணிக்கப்படுகிற கருத்தில் தெளிவு கிடைக்கிற வரையில் கண்மூடித்தனமாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை. எந்த கருத்தையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொண்டவுடன் அதிலிருந்து பின்வாங்கியதுமில்லை. அதனால் தான் அவரை இன்றும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.