சிறுவனின் வாயில் வெடித்த மின் சிகரெட்! 

 

சிறுவனின் வாயில் வெடித்த மின் சிகரெட்! 

அமெரிக்காவை சேர்ந்த 17 வயது சிறுவன் மின் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும்போது வெடித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த 17 வயது சிறுவன் மின் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும்போது வெடித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள யூலி நகரில் புகைபிடிக்கும் பழக்கத்தை  நிறுத்த வேண்டும் என்பதற்காக பர்ட்டன் என்பவர் தன் மகனுக்கு மின் சிகரெட்டை வாங்கிக்கொடுத்துள்ளார். 17 வயதான மகன் ஆஸ்டின், வீட்டில் ஒருநாள் மின் சிகரெட்டைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் மற்றொரு அறையில் இருந்துள்ளனர். 

திடீரென்று, ஆஸ்டினின் அறையிலிருந்து வெடி வெடித்தது போன்ற சத்தம் கேட்கவே, அலறியடித்தபடி சென்று பார்த்தனர். அப்போது ஆஸ்டின் வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட தாடையைப் பிடித்துக்கொண்டு பெற்றோரிடம் ஓடிவந்தார். மகனின் வாயில் மின் சிகரெட் வெடித்துள்ளதை அறிந்த அவரது பெற்றோர் , உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆஸ்டினை பரிசோதித்த டாக்டர் அவரின் தாடைப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், பற்கள் பல உடைந்ததாகவும் தெரிவித்தனர். மின் சிகரெட்டில் உள்ள மின்கலம் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.