சிறுமி வயிற்றில் அரை கிலோ தலைமுடி…ஷாம்பு பாக்கெட்டுகள்: கோவையில் அதிர வைக்கும் சம்பவம்!

 

சிறுமி வயிற்றில் அரை கிலோ தலைமுடி…ஷாம்பு பாக்கெட்டுகள்: கோவையில் அதிர வைக்கும் சம்பவம்!

கட்டி போன்று இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர்.

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடியை அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால்  துடித்து கொண்டிருக்க அவரை பெற்றோர், கோவை திருச்சி சாலையில் உள்ள வி.ஜி.எம். மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கான அழைத்து சென்றனர், அப்போது சிறுமியின் வயிற்றை ஸ்கேன்  செய்து பார்த்தபோது  இரைப்பையில் கட்டி போன்று இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர்.

ttn

இதைத்தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி உண்டாகியது. காரணம் சிறுமியின் வயிற்றில் அவரது  தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களும் இருந்தன. இதையடுத்து சிறுமியின் வயிற்றிலிருந்து அரைகிலோதலைமுடி, பிளாஸ்டிக் கவர்கள் நீக்கப்பட்டு தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.

tn

இதுகுறித்து கூறும் மருத்துவர்கள், ‘சிறுமி  சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்த பொருட்களை விழுங்கியுள்ளார். சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார்.  மன நல மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளித்தால் அவர் 6 மாதத்தில் நலம் பெறுவார். வீட்டில் பெற்றோர் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.