சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; தஷ்வந்த்தின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

 

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; தஷ்வந்த்தின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

தாயை கொலை செய்த வழக்கில் தலைமறைவான தஷ்வந்த், மும்பையில் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்ட போது, போலீசாரின் பிடியில் கைவிலங்கோடு தப்பியோடினார்

சென்னை: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த தஷ்வந்த்தின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றதாக அதே பகுதியில் வசிக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாயை கொலை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

rape

அவர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தவிர, தாயை கொன்றது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பியது உள்ளிட்ட வழக்குகளும் நடைபெற்று வந்தன. இதனிடையே, சிறுமி பாலியல் கொலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் 363, 302, 356, 354(b), 201 ஆகிய பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவரை குற்றவாளி என அறிவித்ததுடன், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

rape

இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த தஷ்வந்த்தின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தாயை கொலை செய்த வழக்கில் தலைமறைவான தஷ்வந்த், மும்பையில் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்ட போது, போலீசாரின் பிடியில் கைவிலங்கோடு தப்பியோடினார். தொடர்ந்து, மும்பையின் அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த தஷ்வந்த்தை, அதற்கு அடுத்தநாள் கைது செய்து போலீசார் சென்னை அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயும் வாசிங்க

கோவை மாணவி கழுத்தறுத்து கொலை: ஒருதலைக்காதலால் உறவினரே கொலை செய்தது அம்பலம்!