சிறுமி ஜெயஶ்ரீயை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்! – தமிழக பா.ஜ.க தலைவர் பேட்டி

சிறுமி ஜெயஶ்ரீயை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்! – தமிழக பா.ஜ.க தலைவர் பேட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் சட்டத்தின் மீது அனைவருக்கும் பயம் வரும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் சட்டத்தின் மீது அனைவருக்கும் பயம் வரும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெநல்லூரில் அ.தி.மு.க நிர்வாகிகளால் எரித்துக்கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஶ்ரீ வீட்டுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் இன்று வந்தார். சிறுமியின் படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

villupuram-girl-murder

அங்கிருந்த நிருபர்களிடம் முருகன் பேசும் போது, “சிறுமி ஜெயஶ்ரீ வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை வழங்க வேண்டும். மேலும்; இந்த வழக்கு தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான வழக்காக இருக்கவேண்டும். நிர்பயா வழக்கில் என்ன தண்டனை அளிக்கப்பட்டதோ, அது போன்று ஒரு தண்டனை அளிக்கப்பட்டால்தான் சட்டத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை வரும்.

murugan-bjp-23

திமுக தலைவர் ஸ்டாலின்; கொரோனா காலகட்டத்தில் மக்களைப் பாதுகாப்பதை தவறவிட்டு; கொரோனா  காலத்திலும் அரசியல் செய்து வருகிறார்; எனவே அவர்  இதனைத் தவிர்க்க வேண்டும். தமிழக அரசு; கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், முதல் நாளிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றது” என்றார்.