சிறுமியை கடத்தி, மணந்து, பாலியல் துன்புறுத்தல்! 22 ஆண்டுகள் சிறை!

சிறுமியை கடத்தி, மணந்து, பாலியல் துன்புறுத்தல்! 22 ஆண்டுகள் சிறை!

திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவர் தனியார் நிறுவனத் தொழிலாளி. 2014ஆம் ஆண்டு அவருடன் வேலை செய்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். 

சிறுமியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவர் தனியார் நிறுவனத் தொழிலாளி. 2014ஆம் ஆண்டு அவருடன் வேலை செய்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். 

tirupur-court

இந்நிலையில் மகளை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரில் வழக்குப்பதிந்து தேடிவந்த போலீசார், விருமாண்டிதான் கடத்தி சென்று திருமணம் செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மகள் பெற்றோரிடம் ஒப்படைத்த திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீஸ், விருமாண்டியை கைதுசெய்தனர். இந்த வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, சிறுமிய கடத்திய குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகளும், பாதிக்கப்பட்ட பெண் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பதால் அதற்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளிக்கு விதித்து தீர்ப்பளித்தார்