சிறுபான்மையினரை கொச்சைப் படுத்தும் சி.பி.ஸ்.சி பாடங்கள்: டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்

சிறுபான்மையினரை கொச்சைப் படுத்தும் சி.பி.ஸ்.சி பாடங்கள்: டி.டி.வி  தினகரன் கடும் கண்டனம்

சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை இழிவு செய்யும் விதமாக நடத்தப்படும் பாடங்களை பாடப் பகுதியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை இழிவு செய்யும் விதமாக நடத்தப்படும் பாடங்களை பாடப் பகுதியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் 6 ஆம் வகுப்பு வினாத்தாளில் டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பை சேர்ந்தவர்?, தலித் என்றால் என்ன?, முஸ்லீம் பழக்க வழக்கங்கள் என்ன? என்பது போன்ற வினாக்கள் இடம் பெற்றிருந்தன.

 இதனைக் கண்டித்து டி.டி.வி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் சிறு பான்மை மற்றும் பட்டியலின மக்களைக்  கொச்சை படுத்தும் வகையில் அமைந்திருக்கும் பாடங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், குறைந்தப்  பட்ச புரிதல் கூட இல்லமால் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் இவ்வகை பாடங்கள் இடம் பெற்றிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது  என கூறியுள்ளார். 

மேலும், இவ்வகை படங்கள் தயாரிப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தேர்வுகளில் வினாக்கள் கேட்பதும் தவறானது என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.