சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் நரகம், இந்தியா சொர்க்கம்! முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு

 

சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் நரகம், இந்தியா சொர்க்கம்! முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு

சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் நரகம், இந்தியா சொர்க்கம் இந்த உண்மையை நாட்டை பிளவுப்படுத்தும் சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என எதிர்க்கட்சிகளை ஒரு பிடித்தார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. அதேசமயம், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு

மும்பையில் பா.ஜ.க.வின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  முஸ்லிம்கள் இந்தியாவில் நிர்பந்தத்தினால் வாழவில்லை. ஏனென்றால் அவர்களது தங்களது தேசியவாதத்தின் அர்ப்பணிப்பை அதற்கு காரணம். சிலர் குறுகிய அரசியல் லாபத்துக்காக குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

மோடி

மேலும், பொய்கள் என்னும் புதர்களால் மலையாகிய சத்தியத்தை மறைக்க முயற்சி செய்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் எந்தவொரு சட்டத்தாலும் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மையினர் மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட குடியுரிமை பறிக்கப்படாது என குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார். சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் நரகம், இந்தியா சொர்க்கம் இந்த உண்மையை நாட்டை பிளவுப்படுத்தும் சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.