சிறுநீரக கற்களை அகற்றும் வாழைத்தண்டு பொரியல்!

 

சிறுநீரக கற்களை அகற்றும் வாழைத்தண்டு பொரியல்!

நிறைய வீட்டில் வாழைத்தண்டை எல்லாம் கடைகளில் வேடிக்கைப் பார்க்கும் பொருளைப் போல பார்த்துச் செல்வதோடு சரி.. அதே சமயம், யாருக்காவது சிறுநீரகத்தில் கற்கள் என்று கேள்விபட்டால் உடனே எங்கேயாவது தேடிப் பிடித்து ஆர்வமுடன் வாழைத்தண்டை சமைத்து சாப்பிடுகிறோம். அதன் பின் மறந்து விடுகிறோம். அப்படி ஆறு மாசத்துக்கு ஒரு முறை வாழைத்தண்டை சாப்பிட்டால் எல்லாம் போதாது. குறைந்தது வாரம் ஒருமுறையாவது  வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறைய வீட்டில் வாழைத்தண்டை எல்லாம் கடைகளில் வேடிக்கைப் பார்க்கும் பொருளைப் போல பார்த்துச் செல்வதோடு சரி.. அதே சமயம், யாருக்காவது சிறுநீரகத்தில் கற்கள் என்று கேள்விபட்டால் உடனே எங்கேயாவது தேடிப் பிடித்து ஆர்வமுடன் வாழைத்தண்டை சமைத்து சாப்பிடுகிறோம். அதன் பின் மறந்து விடுகிறோம். அப்படி ஆறு மாசத்துக்கு ஒரு முறை வாழைத்தண்டை சாப்பிட்டால் எல்லாம் போதாது. குறைந்தது வாரம் ஒருமுறையாவது  வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு துவர்ப்பு சுவையும் அவசியமானது தான். ஒருவேளை உங்களுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்க பிடிக்காவிட்டால், அதனை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். வாழைத்தண்டு பொரியலானது புளிக்குழம்புடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். 
 

banana

தேவையான பொருட்கள்:
 வாழைத்தண்டு – 1
வெங்காயம் – 1 
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மோர் – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
  எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2 
 செய்முறை:
முதலில் வாழைத்தண்டில் உள்ள நாரை நீக்கி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கும் போதே, நறுக்கிய வாழைத்தண்டை மோர் கலந்த நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பாசிப்பருப்பை நீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது வெங்காயம், பாசிப்பருப்பை சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இவை நன்கு வதங்கியதும் மோரில் ஊற வைத்துள்ள வாழைத்தண்டை தனியாக வடித்து இதனுடன் சேருங்கள். இப்போது மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து வாழைத்தண்டை வேக வைக்க வேண்டும்.
 வாழைத்தண்டு நன்கு வெந்து அதில் உள்ள நீர் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி!