சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலத்திற்கு சென்றவர்கள் உள்ளூர் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் அவதி

 

சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலத்திற்கு சென்றவர்கள் உள்ளூர் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் அவதி

தங்களது வீட்டை சென்றடைய எந்தவொரு உள்ளூர் போக்குவரத்து வசதியையும் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர்.

பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்ட முதல் பயணிகள் ரயில் புதன்கிழமை டெல்லிக்கு வந்தபோது, ​​அவர்களில் ஏராளமானோர் தங்களது வீட்டை சென்றடைய எந்தவொரு உள்ளூர் போக்குவரத்து வசதியையும் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர்.

குஜராத், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து புதன்கிழமை காலை டெல்லியை அடைந்த ஏராளமான மக்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே, உள்ளூர் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் சாலையில் கூடியிருந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ரயில் காலை 8 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது.

டெல்லிக்கு வந்த பிறகு, பல பயணிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே நிற்கதியாக நின்றனர். சிலர் உள்ளூர் வண்டி ஓட்டுநர்களை பல்வேறு மாநிலங்களில் வீட்டிற்கு இறக்கிவிடச் செய்ய முயன்றனர்.

சிறப்பு பயணிகள் ரயிலில் ஜெய்ப்பூரிலிருந்து திரும்பிய 14 பேர் கொண்ட குழுவும் ரயில் நிலையத்திற்கு வெளியே காத்திருந்தவர்களில் அடங்கும். எந்தவொரு உள்ளூர் போக்குவரத்தும் கிடைக்காவிட்டால் சாலைகளில் தூங்குவதையும், சொந்த மாநிலத்திற்கு நடந்து செல்வதையும் தவிர வேறு வழியில்லை என்று அந்த குழு கூறியது.