சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை: ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை

 

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை: ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை

கொடநாடு மர்ம மரணங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: கொடநாடு மர்ம மரணங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம், கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kodanad

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புப்படுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள். இதனால் எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன்.

mk stalin

இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமியை உடனடியாக பதவி விலக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத்தலைவரை திமுக எம்.பி.க்கள் சந்திப்பார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.