சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகும் வெளிமாநில முதலீட்டாளர்களால் காஷ்மீரில் சொந்தமாக நிலத்தை வாங்க முடியாத நிலை…..

சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகும் வெளிமாநில முதலீட்டாளர்களால் காஷ்மீரில் சொந்தமாக நிலத்தை வாங்க முடியாத நிலை…..

2019 ஆகஸ்ட் மாதம், முன்னாள் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவு மற்றும் நில உரிமை மற்றும் மாநில பாடங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வைத்திருக்க உதவிய 35 ஏ சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என  2 புதிய யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகும், வெளிமாநில முதலீட்டாளர்களால் அங்கு சொந்தமாக நிலத்தை வாங்க முடியாத நிலை தொடருகிறது.

2019 ஆகஸ்ட் மாதம், முன்னாள் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவு மற்றும் நில உரிமை மற்றும் மாநில பாடங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வைத்திருக்க உதவிய 35 ஏ சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என  2 புதிய யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

jammu-kashimir.jpg1.jpg

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீருக்கும் மற்ற மாநிலங்களை போல் அனைத்து உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும். மேலும், வெளிமாநில முதலீட்டாளர்கள் காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு எந்த நிலைமை நிலவியதோ அதே நிலைமைதான் தற்போதும் அங்கு நிலவுகிறது. இதற்கு காரணம் 2016ல் கொண்டு வரப்பட்ட ஜம்மு அண்டு காஷ்மீர் தொழில்துறை கொள்கைதான்.அந்த கொள்கையின்படி, காஷ்மீர் அரசாங்கம் வெளிமாநில முதலீட்டாளர்களுக்கு நிலத்தை 90 ஆண்டுகள் குத்ததைகக்கு மட்டுமே வழங்க முடியும்.

அந்த தொழில்கொள்கை காஷ்மீரில் 2026 மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். அதனால் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகும் வெளிமாநில முதலீட்டாளர்களால் சொந்தமாக நிலத்தை சொந்தமாக வாங்க முடியாத நிலையே தொடருகிறது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் கீழ், 5 பழைய நிலச்சட்டங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தனியார் சொத்துக்களின் உரிமையை அரசு கட்டுப்படுத்தும் பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.