சிறகொடிந்த பட்டாம்பூச்சிக்கு வாழ்க்கை கொடுத்த பெண்! குவியும் பாராட்டுகள்!

சிறகொடிந்த பட்டாம்பூச்சிக்கு வாழ்க்கை கொடுத்த பெண்! குவியும் பாராட்டுகள்!

பெண்கள் அழகை கொண்டாடுபவர்கள் மட்டுமல்ல.. அன்பாலும் பிற உயிர்களை ஆராதிப்பவர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நம்மூர் நடிகை த்ரிஷா நாய்க்குட்டிகளுக்கு பரிதாபபடுவதெல்லாம் ஒன்றுமே இல்லாத ரகம் என்கிறதைப் போல சிறகுகளை இழந்து பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு பட்டாம்பூச்சிக்கு வாழ்க்கைக் கொடுத்து மீண்டும் பறக்க வைத்திருக்கிறார் ஒரு பெண்.

butterfly

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியைச் சேர்ந்த வேன்பெலாரிகம், அந்த பகுதியில் மாலை நேரத்தில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது கீழே ஒரு பட்டாம்பூச்சி பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். பெண் மனசு ஆழமா மட்டுமில்லாம அந்த ஆழம் முழுக்கவே அன்பால நிறைக்கப்பட்டிருக்குதுன்னு இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்ற மாதிரி, அந்த பட்டாம்பூச்சியைப் பிடிச்சு, பழுதான அதோட இறக்கைகளை வெட்டி அகற்றினார். அதே இடத்துல இறந்து கிடந்த இன்னொரு பட்டாம்பூச்சியை எடுத்து அதோட இறக்கையை வெட்டி எடுத்து இந்தப் பூச்சியின் இறக்கையுடன் ஒட்டினார். பசை காய்ந்து போகும் வரையில் தள்ளாடிக்கிட்டு இருந்த பட்டாம்பூச்சி, பசை காய்ந்ததும் மீண்டும் உற்சாகமா சிறகசைத்து பறக்கத் துவங்கியது. உல்லாசம வட்டமிட்டு பறந்த பட்டாம்பூச்சியைப் பார்த்த வேன்பெலாரிகம் மனசும் லேசாகி பறக்கத் துவங்கியது. அவரோட இந்த  செயலுக்கு உலகம் முழுக்க இருந்தும் பாராட்டுக்கள் குவிஞ்சு வருது!