சிரியாவில் தொடர் குண்டுவெடிப்புகள்.. பீதியில் பொதுமக்கள்!

சிரியாவில் தொடர் குண்டுவெடிப்புகள்.. பீதியில் பொதுமக்கள்!

சிரியா நாட்டில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்த அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பொதுமக்கள் பீதியில் இருக்கின்றனர்.

சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் துலுக் பகுதி துருக்கியின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. இதன் துருக்கி எல்லைப்பகுதிக்கு அருகே உள்ள காமிஷ்லி நகரில் நேற்றைய தினம் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

syria

நிகழ்த்தப்பட்ட 3 குண்டுவெடிப்பின் குண்டுகளும் நின்று கொண்டிருந்த கார்களில் வைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி தற்போது வரை 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலர் கை, கால்களை இழந்துள்ளதாக அந்நாட்டு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் சிரியா எல்லையில் இருந்து குர்து படைகள் பின் வாங்கிய பிறகு இது போன்ற பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் அங்கு நிகழ்ந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க்காத நிலையில், துருக்கி அரசாங்கம் குருது போராளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது.