சிரியன் பீஃப் ஃபிரை…கேரளா ஸ்டைல் நம்ம வீட்டிலேயே செய்யலாம்!

 

சிரியன் பீஃப் ஃபிரை…கேரளா ஸ்டைல் நம்ம வீட்டிலேயே செய்யலாம்!

கேரளத்தில் இருக்கும் ஒரு பழைமையான கிறித்தவ பிரிவு இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித தோமையரால் கிறித்தவ மதத்துக்கு மாறிய நம்பூதிரிகளின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

கேரளத்தில் இருக்கும் ஒரு பழைமையான கிறித்தவ பிரிவு இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித தோமையரால் கிறித்தவ மதத்துக்கு மாறிய நம்பூதிரிகளின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

beef

 

கோட்டயம் பகுதியில் வசிக்கும் சிரியன் ஆர்தொடக்ஸ் என்கிற இவர்களின் உணவு வகைகள் கேரளத்தில் பிரபலம்.அதில் முக்கியமானது சிரியன் பீஃப் ஃபிரை.ஒருமுறை ருசித்துவிட்டால் விடவே மாட்டீர்கள்.எப்படி செய்வது என்று பார்ப்போமா?.

தேவையான பொருட்கள்

இளசான மாட்டுக்கறி  ½ கிலோ
நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்.
பச்சை மிளகாய் 10
சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட தேங்காய் 1 கப்
கறிவேப்பிலை இலை ஒரு ஈர்க்.
மஞ்சள்  தூள்
மல்லித்தூள் 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் 3 டீஸ்ப்பூன்
கரம்மசாலா தூள் 1 டீஸ்பூன்
உப்பு
தேங்காய் எண்ணெய் 

முதலில் பீஃபை சுத்தமாக கழுவி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து நான்கு விசில் விட்டு எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி தேங்காய் எண்ணெயை ஊற்றி,அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.

beef

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து,கொஞ்சம் உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள்,மிளகாய்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள்.

இப்போது ஒரு அரைஸ்பூன் தேங்காய் எண்ணை விட்டு வெட்டிவைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை சேர்த்து மறுபடியும் ஒரு நிமிடம் புரட்டி விடுங்கள். இப்போது பீஃப் வேகவைத்த குக்கரை திறங்கள்.அதில் நீர் இருந்தால் மறுபடியும் குக்கரை சூடாக்கி அதை வற்றவையுங்கள்.அல்லது,நீரை வடித்து விட்டு கறித்துண்டுகளை கடாயில் சேர்த்து புரட்டி விடுங்கள். 

இன்னொரு அரை குழிக்கரண்டி எண்ணை விட்டு கொஞ்சமும் கிரேவியே இல்லாமல் ஆகும் வரை கிளறுங்கள்.கிட்டத்தட்ட கருப்பு நிறத்துக்கு மாறும்.தேவைபட்டால் அவ்வப்போது எண்ணை விட்டுக்கொண்டு வறுத்து எடுங்கள்.சிரியன் பீஃப் பிரை ரெடி.