சிரிங்கடா சிரிங்க, மூணு வருசம்தான், இன்னும் மூணே வருசம்தான்  பூமாதேவி சிரிக்கப்போறா

 

சிரிங்கடா சிரிங்க, மூணு வருசம்தான், இன்னும் மூணே வருசம்தான்  பூமாதேவி சிரிக்கப்போறா

நாட்ல நடக்குறது எதுவும் நல்லதுக்கு மாதிரி தெரியல. விண்கல்லு மோத வருதுங்குறான், சுனாமின்றான், காட்டுத்தீன்னு பதறுறான்.

நாட்ல நடக்குறது எதுவும் நல்லதுக்கு மாதிரி தெரியல. விண்கல்லு மோத வருதுங்குறான், சுனாமின்றான், காட்டுத்தீன்னு பதறுறான். இப்ப இந்த வரிசையில புதுசா பூமாதேவி வாயை திறந்துட்டான்னு வந்து நிக்கிறானுக. ஒண்ணும் இல்ல, திடீர்னு ஒரு இடத்துல 30 மீட்டர் பள்ளத்துக்கு ஒரு குழி உருவாகிச்சுன்னா, பூமா தேவி வாயை திறந்துட்டானுதானே நம்ப தோணுது?

earth

ரஷ்யாவுல, துலா மாகாணத்துல ஒரு சின்ன கிராமம், கிராமம்னாலே சின்னதுதான் நீ விசயத்துக்கு வான்றீங்களா, அதுவும் சரிதான். அந்த இடத்துல பசங்க கிட்டிப்புல், கோலி, பம்பரம்னு விளையாடிகிட்டு இருக்கும்போது பார்த்தா, இந்த பள்ளம் உருவாகி இருக்கு. பள்ளம்னா நம்ம சென்னை மவுன்ட் ரோட்ல சுரங்க மெட்ரோவுக்கு பக்கத்துல விழுகுற பள்ளம் எல்லாம் கிடையாது, கிட்டத்தட்ட 50 அடி அகலத்துக்கு, 5 மாடி வீடு ஒண்ணை உள்ளே இறக்குற அளவுக்கு பெரிய பள்ளம்னா பாருங்களேன்.

சென்னை விமான நிலைய கான்ட்ராக்டர் எதுவும் இந்தப்பக்கம் ஏதாச்சும் அரசாங்க டென்டர் எடுத்து வேலை முடிச்சாரான்னு ஒரு தடவை செக் பண்ணனும். எதுக்கு சொல்றேன்னா, இந்த திடீர்னு விழுதாம், சாயுதாம் எல்லாம் அவர் கைராசி பாருங்க.