சிரஞ்சீவி படத்தில் மகேஷ் பாபு!? ராம் சரணின் மாஸ்டர் பிளான் 

 

சிரஞ்சீவி படத்தில் மகேஷ் பாபு!? ராம் சரணின் மாஸ்டர் பிளான் 

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தாங்கள் தயாரிக்கும் ஆச்சார்யா படத்தின் பணிகளில்  மிகவும் பிசியாக உள்ளார். இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இங்கு ஏ.ஆர் முருகதாஸ் போல தெலுங்கில் சமூக கருத்துக்களை தெளிக்கும் படங்களை எடுப்பதில் பிரபலமானவர்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தாங்கள் தயாரிக்கும் ஆச்சார்யா படத்தின் பணிகளில்  மிகவும் பிசியாக உள்ளார். இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இங்கு ஏ.ஆர் முருகதாஸ் போல தெலுங்கில் சமூக கருத்துக்களை தெளிக்கும் படங்களை எடுப்பதில் பிரபலமானவர். ஆச்சார்யா படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக  நடந்து கொண்டிருக்கிறது.  

chiru-09

மகேஷ் பாபுவும் ராம் சரணனும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. இருவரும் மிக நெருக்கமான நட்பு வட்டத்தில் இருப்பவர்கள். தற்போதைய தகவல்களின் படி, ராம் சரண் தான் தயாரிக்கும் படத்தில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். இந்த படத்தில் மகேஷ் பாபுவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

mahesh-babu

கொரட்டலா சிவா சமீபத்தில் மகேஷ் பாபுவை சந்தித்து கதையை சொல்லியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி பாரத் ஆன நேனு, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். கிடைத்த தகவல்கள் படி நடந்தால் ஆச்சார்யா படத்தில் மகேஷ் பாபுவை ஒரு சிறப்பு தோற்றத்தில் பார்க்கலாம்.

mahesh-babu-87

இந்த படத்தில் வரும் ஒரு நக்சலைட் கதாபாத்திரத்திற்கு ராம் சரண் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தன்னை விட மகேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ராம் சரண் நினைக்கிறார்.