சியோமி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பு

 

சியோமி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பு

சியோமி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: சியோமி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஃபிளாஷ் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் முதல் ஃபிளாஷ் விற்பனை மார்ச் 25-ஆம் தேதி நடைபெறவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரசால் பல மாநில பூட்டுதல்கள் காரணமாகமேக்ஸ்விற்பனையை ஒத்தி வைக்க சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ttn

ஆரா பேலன்ஸ் டிசைன் என்று இந்த ஸ்மார்ட்போனை சியோமி அழைக்கிறது. 6.67 இன்ச் டிஸ்பிளே, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், விரல்ரேகை சென்சார், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சம் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அரோரா ப்ளூ, வொயிட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய நிறங்களில் ‘ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மற்ற சிறப்பம்சங்களாக 64 எம்.பி ரியர் கேமரா செட்டப், 32 எம்.பி செல்பி கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசசர், 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5020 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 30 நிமிடங்களில் ஜீரோ முதல் 50 சதவீதம் சார்ஜ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.