சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு

 

சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு

சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான டீசர் வீடியோவை அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைவருமான லின் பின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே இரண்டு புறங்களிலும் மடிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் டேப்லெட் மற்றும் மொபைல் போன் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் அதன் பின்புற டிஸ்பிளே ஆஃப் ஆகாமல் இருக்கிறது.

எனினும், இப்போது வரையில் இந்த ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்படும்போது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகளவு எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கான பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அதையே சூட்டலாம் என்று சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.