சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ 9 மற்றும் எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ 9 மற்றும் எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ 9 மற்றும் எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெய்ஜிங்: சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ 9 மற்றும் எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ 9 மற்றும் எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் சியோமி எம்.ஐ 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,725), 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,900), சியோமி எம்.ஐ 9 டிரான்ஸ்பரண்ட் லிமிடெட் எடிஷன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,300) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல சியோமி எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன் புளு, வைலட் மற்றும் டார்க் கிரேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை 1,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,150) என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 2,299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.24,330) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் சியோமி எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மாடல்கள், 128 ஜிபி மெமரி, (12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி டிரான்ஸ்பரண்ட் எடிஷன்), டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10, 48 எம்.பி + 12 எம்.பி + 16 எம்.பி மூன்று பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 20 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சியோமி எம்.ஐ 9 எஸ்.இ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 5.97 இன்ச் ஃபுல் ஹெச்.டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10 இயங்குதளம், 48 எம்.பி + 8 எம்.பி + 13 எம்.பி டிரிபிள் பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 20 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3070 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.