சியோமி எம்.ஐ 10 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்!

 

சியோமி எம்.ஐ 10 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்!

சியோமி நிறுவனத்தின் எம்.ஐ 10 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்: சியோமி நிறுவனத்தின் எம்.ஐ 10 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும், சாதனங்களும் இந்தியாவின் ஆன்லைன் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இதுதவிர நாள்தோறும் புதுப்புது ஸ்மார்ட்போன்களை உருவாக்கி அவற்றை சந்தைக்கு கொண்டு வருவதில் சியோமி நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், எம்.ஐ 10 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஐ 10 மட்டுமில்லாமல் எம்.ஐ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களும் வெளியாகியுள்ளது.

mi 10 / top tamil news

இதில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே மற்றும் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. சியோமி எம்.ஐ 10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், செங்குத்தன பின்பக்க கேமரா சென்சார்கள், முன்புறம் வளைந்த டிஸ்பிளே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோபோன், லவுட் ஸ்பீக்கர் கிரில் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பிடிக்க கூடும் என்று தொழில்நுட்ப வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.