சியோமியின் ‘65வாட்ஸ் யுனிவர்சல் டைப்-சி சார்ஜர்’ ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு அறிமுகம்

 

சியோமியின் ‘65வாட்ஸ் யுனிவர்சல் டைப்-சி சார்ஜர்’ ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு அறிமுகம்

சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு ஏற்ற 65வாட்ஸ் யுனிவர்சல் டைப்-சி சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு ஏற்ற 65வாட்ஸ் யுனிவர்சல் டைப்-சி சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்ட சியோமி நிறுவனம் தனது உபரி பாகங்களில் புதியதாக துணைக்கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் லேப்டாப்களுக்கு ஏற்ற 65வாட்ஸ் யுனிவர்சல் டைப்-சி சார்ஜர் ஆகும். இது முந்தைய சியோமி சார்ஜர்களை காட்டிலும் சுமார் 26 சதவீதம் சிறியதாகும். இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

xiaomi

List of laptops compatible with Xiaomi’s new 65W universal Type-C charger

13 இன்ச் டிஸ்பிளே கொண்ட மேக்புக் ப்ரோ சாதனத்தை இந்த சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்தால் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். அதேபோல 15 இன்ச் எம்.ஐ நோட்புக் ப்ரோ சாதனத்தை 2 மணி நேரம் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களை இந்த புதிய மாடல் சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சீன இணையதளத்தில் இந்த புதிய சார்ஜர் கிடைக்கிறது.