சியோமியின் மலிவு விலை ‘ரெட்மி கோ’ ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைப்பு

 

சியோமியின் மலிவு விலை ‘ரெட்மி கோ’ ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைப்பு

இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மும்பை: இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் மிகவும் மலிவான விலை கொண்ட மாடல் ரெட்மி கோ ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது 8 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.4299 விலையிலும், 16 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.300 குறைக்கப்பட்டு ரூ.4499 விலையிலும் விற்கப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஷோரூம்களில் இந்த புதிய விலை உடனடியாக அமலுக்கு வருகிறது.

redmi

ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 5 இன்ச் எச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 425 பிராசசர், ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளம், 1 ஜிபி ரேம், டுயல் சிம், 8 எம்.பி ரியர் கேமரா, 5 எம்.பி செல்பி கேமரா, 3000 எம்.ஏ.எச் பேட்டரி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.