சியாரா புயல் உதவியால் புதிய சாதனை படைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

 

சியாரா புயல் உதவியால் புதிய சாதனை படைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

சியாரா புயலுக்கு நடுவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

லண்டன்: சியாரா புயலுக்கு நடுவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் போயிங்-747 ரக பயணிகள் விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. ஏற்கனவே வேகமாக பயணித்து கொண்டிருந்த இந்த விமானத்தின் வேகத்தை சியாரா புயல் இன்னும் அதிகரித்து விட்டது. இதனால் வழக்கமான நேரத்தில் தரையிறங்குவதற்கு மிக முன்பாகவே அந்த விமானம் லண்டனை சென்றடைந்து விட்டது.

அதாவது 4 மணி நேரம் 56 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை இந்த விமானம் சென்றடைந்து விட்டது. ஆனால் வழக்கமாக இந்த விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டன் வருவதற்கு 6 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு நார்வே விமானம் 5 மணி 13 நிமிடங்களில் அட்லாண்டிக் கடலை கடந்ததே சாதனையாக இருந்தது. சியாரா புயலின் உதவியால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இந்த விசித்திர சாதனையை படைத்துள்ளது.