சியாச்சினில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் திடீர் பனிச்சரிவு! 

 

சியாச்சினில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் திடீர் பனிச்சரிவு! 

இமயமலையின் சியாச்சின் மலைச் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சியாச்சின் பனிச் சிகரத்தின் வடக்கு பகுதியில் ராணுவம் வழக்கமான ரோந்துப் பணியில் 8க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச் சரிவில் ராணுவ வீரர்கள் புதையுண்டதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சியாச்சின் பகுதி உலகிலேயே உயரமான போர் பகுதியாகும்.

glacier

இங்கு மைனஸ் 60 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும். காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதி சுமார் 18,000 அடி உயரமானது. இங்கு  அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சியாச்சின் மலை பகுதியில் நிகழ்ந்த திடீர் பனிச்சரிவில், 8 பாதுகாப்புபடை வீரர்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. . அவர்களை மீட்கும் பணியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.