சிம்பு- ஹன்சிகாவின் கூட்டணியில் உருவான மஹா படம் மே மாதம் வெளியீடு!

 

சிம்பு- ஹன்சிகாவின் கூட்டணியில் உருவான மஹா படம் மே மாதம் வெளியீடு!

அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 50-வது படம் ‘மஹா’.நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு – ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Maha

கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஹா படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.