சிம்பு ஸ்டைலில் அதிமுகவினரை கலாய்த்த பிரபல நடிகர்!

 

சிம்பு ஸ்டைலில் அதிமுகவினரை கலாய்த்த பிரபல நடிகர்!

‘எல்.கே.ஜி’ படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,  சிம்பு பாணியில் ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.

சென்னை: ‘எல்.கே.ஜி’ படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,  சிம்பு பாணியில் ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் பிரபு இயக்கியுள்ள ‘எல்.கே.ஜி’ படத்திற்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை எழுதியுள்ளார். சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி வெளியீடு என்பதால் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. முதலாவதாகக் குடியரசு தினத்தன்று முதல் பாடலை வெளியிடவுள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.

சமீபகால அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்பதால், போஸ்டரையும் அவ்வாறே வடிவமைத்துள்ளது படக்குழு. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இருவரும் கையில் செங்கோல் வைத்திருப்பது போன்றே, ஆர்.ஜே.பாலாஜி – பிரியா ஆனந்த் இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள்.

இந்தப் போஸ்டருக்கு அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர்,  ‘படம் ரீலீஸ் அகட்டும். உன் கட் அவுட்டுக்குச் செருப்பு அபிஷேகம் பண்ணிடுறேன்’ என்று பதிலளித்தார். அதற்குச் சிம்பு ஸ்டைலில், ‘இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம மாஸ் காமிங்க…!’ என்று ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்டுள்ளார்.