சிம்பு-கவுதம்-ரகுமான்: மீண்டும் இணைந்த ‘விடிவி’ ஹிட் காம்போ!

 

சிம்பு-கவுதம்-ரகுமான்: மீண்டும் இணைந்த ‘விடிவி’ ஹிட் காம்போ!

இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகவிருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகவிருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான காதல் திரைப்படமான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இவர்களது காம்போவில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் காம்போவாக கருதப்படும் கவுதம் மேனந்சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் மேஜிக் காம்போ மீண்டும் இணையவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் புதிய கதையா அல்லது ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’-வா என்பது குறித்து தெரியவில்லை.

vtv

கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சிம்பு, மணிரத்னத்தின் கூட்டணியில் ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக துவக்கினார். அதைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.