’சிம்பு கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியும்’…பகிரங்கமாகப் போட்டுடைத்த நடிகர்…

 

’சிம்பு கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியும்’…பகிரங்கமாகப் போட்டுடைத்த நடிகர்…

சிம்பு கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போதைக்கு அதை வெளிய சொல்ல முடியாது’ என்று சிம்புவின் நெருங்கிய நண்பர் நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார். 

’சிம்பு கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போதைக்கு அதை வெளிய சொல்ல முடியாது’ என்று சிம்புவின் நெருங்கிய நண்பர் நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார். 

டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்குப் பின்னர் அனைவரின் கேள்வி சிம்புவின் திருமணம் எப்போது என்பதுதான். அதே போல சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற கேள்வியும் இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டப்போது கேவிக்கேவி அழுத டி.ராஜேந்தர் ‘அது என்னோட விதி. வேற எதுவும் கேக்காதீங்க’ என்று கண்ணீர் விட்டார். 

cool suresh

இந்த நிலையில் ‘அந்த நிமிடம்’ என்ற படவிழாவில்  சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார். இவர் சிம்புவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்புவுக்கு மிக நெருக்கமான நண்பரும் கூட. டி.ராஜேந்தரின் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். அந்த விழாவில் பேசிய கூல் சுரேஷ், ‘சிம்பு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் யார் என்று எனக்குத்தெரியும். அதை சிம்புவின் அனுமதியுடன் நேரம் வரும்போது சொல்லுவேன். அதுவரை யாரும் அந்தப்பெண் யார் என்று கேள்விகேட்டு சிம்புவையோ அவரது தந்தை டி.ஆரையோ தொந்தரவு செய்யாதீர்கள்’ என்றார்.