சிம்பு இன்னும் பழைய காதலை மறக்கலையா! அலட்டிக்காத நடிகை!?

சிம்பு இன்னும் பழைய காதலை மறக்கலையா! அலட்டிக்காத நடிகை!?

காதல் மன்னன்,காதல் இளவரசன் என்று சீனியர் நடிகர்களுக்கு கொடுத்த பட்டங்களை பறித்து எப்பவவோ சிம்புகிட்ட ஒப்படைச்சிருக்கணும்! செய்யாமல் விட்ட சமூகத்துக்கு சிம்புவின் சாபம் சும்மா விடாது.அவ்வளவு காதல் கதைகள் அவருக்கு பின்னாடி இருக்கு.

எல்லாத்தையும் ஜஸ்ட் லைக் தட் என்று கடந்துவிடுகிற சிம்பு இப்போதைக்கு சிங்கிள் என்பது போல் எந்த வம்பு தும்பும் இல்லாமல் இருக்கிறார்.வம்பு வந்திருமோ! என்பதற்கான செய்திதான் இது. இப்போது அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கும் ‘மஹா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

maha

ஸ்ரீகாந்த்-ஹன்சிகா ஜோடி நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் சிம்பு இந்த புராஜெக்ட்டுக்குள் வந்திருப்பதுதான் சினிமாவில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது!

simbu and hansika

‘மௌனராகம்’வரும் கார்த்திக் கேரக்டர் மாதிரி செம துள்ளலான கேரட்டர். கொஞ்ச நேரந்தான் வரும் என்றாலும் மறுக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.அதற்கு கதையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் வேற!

ஹன்சிகாவுக்கு இது ரீ என்றி மூவி.என்னதான் இருந்தாலும் ‘பழைய காதலிய பாதையில கண்டுக்கிட்டா…’ என்ற பாட்டெல்லாம் மனசுக்குள்ள வந்து போயிருக்கும் போல !மறுப்பேதும் சொல்லாமல் நடிக்க ஓக்கே சொல்லியிருக்கார் சிம்பு! ஹன்சிகாவும் சிம்பு நடிக்கிறதுல எனக்கு பிரச்சினையில்லை என்று பெருந்தன்மை காட்டியிருக்கிறார்.

காதல்ல பழைய காதல்-புது காதல்ன்னு என்ன இருக்கு? காதல் காதல்தானே !