சிம்புவுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிக் பாஸ் தர்ஷன் காதலி!

 

சிம்புவுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிக் பாஸ் தர்ஷன் காதலி!

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த மாடலும், ஹீரோவுமான தர்ஷன் கலந்து கொண்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் போல் வனிதா சொல்வதை கேட்கமால், அவர் செய்யும் தவறை தட்டிக் கேட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 

இந்தநிலையில் இவரும், மாடல் அழகி பட்டம் வென்ற சனம் ஷெட்டியும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருகின்றனர்.இந்நிலையில் சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், ‘நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள். நம் தலைமுறையினருக்கு டிரெண்ட் செட்டிங்காக இருக்கும் படங்களை அளிக்கும் தி ஒன்ட் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார். அவரின் அறிவை பார்த்து வியக்கிறேன். சினிமா முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். உங்களைச் சந்தித்ததில் பெருமையாக உள்ளது சிம்பு’ என்று தெரிவித்துள்ளார்.