சிம்புவின் ரெட் கார்டு இன்று வெளியாகிறது! 

 

சிம்புவின் ரெட் கார்டு இன்று வெளியாகிறது! 

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரெட் கார்டு பாடல் இன்று வெளியாகிறது

சென்னை: சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரெட் கார்டு பாடல் இன்று வெளியாகிறது. 

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரபு, நாசர், ரம்யா கிருஷ்ணன், கேத்தரின் தெரசா, யோகி பாபு, மேகா ஆகாஷ், மகத், ரோபோ சங்கர் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. 

இந்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியானதால் இப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில்,வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில் உருவாகிய ‘ரெட் கார்டு’ பாடல், இன்று வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.