சிம்பாவாக சித்தார்த்: தி லயன் கிங் டப்பிங் வீடியோ வெளியானது!

 

சிம்பாவாக சித்தார்த்: தி லயன் கிங் டப்பிங் வீடியோ வெளியானது!

தி லயன் கிங் படத்தில் சித்தார்த் டப்பிங் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. 

சென்னை: தி லயன் கிங் படத்தில் சித்தார்த் டப்பிங் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கடந்த 1994ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படம் ‘தி லயன் கிங்’. 90ஸ் கிட்ஸிக்கு மிகவும் பிடித்தமான இந்த படத்தை மீண்டும் டிஸ்னி தயாரித்துள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜங்கிள் புக்’ போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பொதுவாக ஒருஅனிமேஷன் படம் வெளியாகிறது என்றால் அந்த மொழியில் உள்ள பெரிய நடிகர், நடிகையை டப்பிங் கொடுப்பார்கள். அந்த வகையில் இதை இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க டிஸ்னியுடன் இணைந்து அரவிந்த் சாமி,சித்தார்த்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை டப்பிங் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில் இந்த படத்திற்காக சித்தார்த் டப்பிங் பேசும் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிம்பாவாக சித்தார்த் என்று குறிப்பிட்டுள்ள அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.