சிம்டாங்காரனை தோற்கடித்த ரவுடி பேபி: எப்படி தெரியுமா?

 

சிம்டாங்காரனை தோற்கடித்த ரவுடி பேபி: எப்படி தெரியுமா?

‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற  ‘ரவுடி பேபி’ பாடல் சிம்டாங்காரன் பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. 

சென்னை: ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற  ‘ரவுடி பேபி’ பாடல் சிம்டாங்காரன் பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. 

பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை  சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இவருடன் வரலட்சுமி  சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.   கடந்த மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

rowdy baby

10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்திருந்தனர்.தனுஷ் எழுதி பாடியிருந்த ரவுடி பேபி பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். ரவுடி பேபி’ பாடலின் லிரிக் வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

rowdy baby

இந்நிலையில் ரவுடி பேபி  பாடல் வீடியோவை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது.   இந்த பாடல் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. சர்கார் ‘படத்தில் இடம்பெற்ற  சிம்டாங்காரன் பாடலின் யூடியூப் சாதனையையும் முறியடித்துள்ளது.