சிப்பிப்பாறை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!

 

சிப்பிப்பாறை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!

சிப்பிப்பாறை என்னும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்திலுள்ள சிப்பிப்பாறை என்னும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் பாட்டாசு ஆலையில் 13 அறைகள் எரிந்து தரைமட்டமாகின.

ttn

அதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த தீயாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த விபத்து, விதிகளை மீறி ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரித்ததால் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ttn

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், சாத்தூர் கோட்டாட்சியரும் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த தீ விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.