சிபி ராஜின் ‘கபடதாரி’ : கிளாப் அடித்து துவக்கி வைத்த நடிகர் சிவகுமார்

 

சிபி ராஜின் ‘கபடதாரி’ : கிளாப் அடித்து துவக்கி வைத்த நடிகர் சிவகுமார்

இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் வினியோகஸ்தர்கள் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

நடிகர் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. 

kabadadhari

நடிகர் சிபி ராஜ் நடிக்கும் திரைப்படம் கபடதாரி. இயக்குநர்  பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தில் நடிகைகள் நந்திதா, பூஜா குமார், நடிகர்கள் நாசர்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சைமன் கிங் இசையமைக்கும்  இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் வினியோகஸ்தர்கள் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. 

kabadathari

இந்நிலையில்  கபடதாரி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. நடிகர் சிவகுமார் கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத்  துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயக்குநர்  சசி, சிபிராஜ்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.