சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ஆஜர்

 

சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ஆஜர்

சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜராகியுள்ளார்.

சென்னை: சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜராகியுள்ளார்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்நிலையில், குட்கா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.